ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயர்... !

 
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்

தமிழர் பண்டிகையாம்   பொங்கல் பண்டிகைக்கு  ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  தமிழகத்தில்  ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை தச்சாங்குறிச்சியில்  முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும். மதுரையை பொறுத்தவரை  அவனியாபுரத்தில் முதலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி பின்  அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என தொடர்ச்சியாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில்    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் இதுவரை ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவர்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்

இதனால்  ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்களுக்கு சரியான இடம்கிடைப்பதில்லை எனத் தொடர் புகார்கள் வெளியாகின.   ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர்  கீழக்கரையில்   66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதல்வர்  சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடியில்  உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.   மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  முதல்வர் ஸ்டாலின் விரைவில் இந்த அரங்கை திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  

ஜல்லிக்கட்டு

அதன்படி   மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி  23ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளன. புதிய ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில்  வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web