1000 படுக்கைகளுடன் கலைஞர் நினைவு மருத்துவமனை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!

 
தமிழக பட்ஜெட்

சென்னை கிண்டியில், 1000 படுக்கைகள் வசதிகளுடன் கலைஞர் நினைவு பன்னோக்கு  மருத்துவமனை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.  62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை, 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாகவும் இலக்குகளில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். தமிழ் மொழி உலக மொழியாக திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க பயணங்கள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க பண்பாட்டு தமிழ் மாநாடு நடத்தப்படும்.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை

591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். சங்கமம் கலை பண்பாட்டு திருவிழா மேலும் இரண்டு நகரங்களில் நடத்தப்படும். சென்னை சங்கமம் கலை விழா மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை

அரசு ஸ்டான்லி மருத்துவனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும். சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!