பட்ஜெட் 2025 : தமிழகம் முழுவதும் 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்!

இன்று தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார். ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு
பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்
சென்னை அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.
இந்த நகரில் மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும். நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, தென்காசி, நாகை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அகழாய்வுக்காக 7 கோடி ரூபாய் நிதி
வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகைக்காண ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும்.
தமிழ் மொழியின் சிறப்புக்காக மதுரை உலக தமிழ் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் புத்தகக் கண்காட்சி அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம்
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள்
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்திற்காக 2200 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு
இத்திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகள் ரூ1000 பெற்று பயன் பெற்று வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள்
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும்
ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி வங்கி கடன்
சென்னை கோவை மற்றும் மதுரையில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும். மேலும் சென்னை கோவை மற்றும் மதுரையில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மத்திய அரசு கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்காத நிலையில் தமிழக அரசு தங்களுடைய சொந்த நிதியிலிருந்து விடுவித்துள்ளது.
முதியோர்களை பராமரிப்பதற்காக 25 இடங்களில் முதியோர் அன்புச் சோலை
குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் 10 புதிய அரசு கலை கல்லூரிகள்
அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!