ஆருத்ரா தரிசனம்... இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இன்று டிசம்பர் 25ம் தேதி, வியாழக்கிழமை காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரம் கோவில் உற்சவ ஆச்சாரியர் சிவாநாத் தீட்சிதர் இன்று காலை 7.31 மணி முதல் 8.30 மணி வரை வேத மந்திரங்களுடன் கொடியேற்றி விழாவை துவக்குகிறார்.

இன்று தொடங்கும் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. நாளை 26ம் தேதி சந்திரபிரபை வாகனத்தில், 27ம் தேதி தங்க சூரியபிரபை, 28ம் தேதி வெள்ளி பூத வாகனம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 30ம் தேதி வெள்ளி யானை வாகனம், 31ம் தேதி தங்க கைலாச வாகனம், ஜனவரி 1ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வீதி உலா நிகழ்வுகள் நடைபெறும்.

தெருவடைச்சானில் தேரோட்டம் ஜனவரி 2ம் தேதி, மறுநாள் 3ம் தேதி மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், ரகசிய பூஜை நடைபெறும். பஞ்சமூர்த்தி வீதி உலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடன தரிசன விழா, 5ம் தேதி தெப்ப உற்சவம் என தொடரும் இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
