ஆருத்ரா தரிசனம்... நாளை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

 
ஆருத்ரா தரிசனம் காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!! அதிரடி அறிவிப்பு!!

நாளை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக நாளை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாத ஆனித்திருமஞ்சனமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த டிசம்பர் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த பத்து நாட்களுக்குத் தினமும் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

ஆருத்ரா

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிவார்கள் என்பதால், பக்தர்களின் வசதியையும், விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி நாளை கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம்

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் பிப்ரவரி 14-ம் தேதியன்று கடலூர் மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவசரத் தேவைகளுக்காக அரசு கருவூலங்கள் மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!