இனி என் படங்களிலும் எல்லாருக்கும் ஒரே வகையான உணவு... நடிகர் அருண்விஜய் கேப்டன் சமாதியில் சூளுரை... !

 
அருண்விஜய்

தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகரும், தேமுதிகவின் முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்  காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழகமே அவரது இறுதிப் பயனத்தில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.  ஆனால் சிலரால் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வரஇயலாத சூழ்நிலை. இவர்கள் ஒவ்வொருவராக  அவரின் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் இன்று கேட்டனின் நினைவு இடத்தில் இறுதி மரியாதை செலுத்தினார்.  

கேப்டன்

படத்தில் சண்டை பயிற்சி மேற்கொள்ளும் போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ளார்.  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் அவரால்  விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில்   கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். கேப்டன் குறித்து அருண் விஜய் நான்  விஜயகாந்த் சாரை பார்த்து தான் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டேன். அவருடைய சண்டைக்காட்சிகளுக்கு பரம ரசிகன் நான்.

 

அருண்விஜய்

 

கேப்டனின்  சண்டை காட்சிகளில் எப்போதுமே தனித்துவம் இருக்கும். அவரது பாணியில் என்னுடைய சண்டை காட்சிகளும் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.  கேப்டன் சினிமாவுக்காக பல நல்ல விஷயங்களை செய்துள்ளார்.  அதனை பின்பற்றும் வகையில்   இனி என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்குமே ஒரே வகையான சாப்பாடு தான் எனக் கூறியுள்ளார்.  கேப்டன் சமாதியில்  இந்த  சபதத்தை அருண் விஜய் எடுத்துள்ளார். இவரது முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web