ஐசிசி-யின் 'பிப்ரவரி நாயகி' அருந்ததி ரெட்டி... ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய இந்திய வீராங்கனைக்கு உயரிய விருது!

 
அருந்ததி அருந்ததி

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து 'மாதத்தின் சிறந்த வீரர்'  விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026 பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டியும், சிறந்த வீரராகப் பாகிஸ்தான் அணியின் சாகிப்ஸதா ஃபர்ஹானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 8 விக்கெட்டுகளைக் வீழ்த்தி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2-1 தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததற்காக அருந்ததி ரெட்டிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

ஆண்கள் பிரிவில் விருது வென்றுள்ள சாகிப்ஸதா ஃபர்ஹான், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் (2026) ரன் வேட்டை நடத்திப் பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். ஒரே டி20 உலகக் கோப்பையில் 2 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், 7 போட்டிகளில் 383 ரன்கள் குவித்து, ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார். இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோரை முந்தி அவர் இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

விருது குறித்துப் பேசிய அருந்ததி ரெட்டி, "ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல; அந்தத் தொடர் வெற்றிக்கு நான் பங்களித்தது மற்றும் இந்த விருது எனக்குக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். இந்திய வீராங்கனையின் இந்தச் சாதனைக்குப் பிசிசிஐ மற்றும் விளையாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பிப்ரவரி மாதத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இந்த விருதை வென்றிருப்பது ஆசிய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!