ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் ரசிகைகளை நோக்கி ஆபாச சைகை... பரபரப்பு வீடியோ!
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்குள் உள்ள பிரிகேட் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்ட கேளிக்கை விடுதி நவம்பர் 28ஆம் தேதி திறக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்றார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள், குறிப்பாக இளம்பெண்கள், அந்தப் பகுதியில் கும்பலாக கூடி நின்றனர்.
Actor #ShahRukhKhan’s son #AryanKhan recently visited #Bengaluru. He had come to the city for a private event but ended up causing controversy.
— Hate Detector 🔍 (@HateDetectors) December 4, 2025
Fans had gathered at a pub to see him, and during this time, he showed his middle finger in public.
A video of the incident has gone… pic.twitter.com/HfRIgrLapK
இதற்கிடையில், ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்த ஆர்யன் கான், ஆபாசமாக சைகை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் அருகில் மந்திரி ஜமீர் அகமதுகான், அவரது மகன், மேலும் ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகனும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களும் இதைக் கண்டு எந்த எதிர்ப்புக்களும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யாத நிலையில், பிரபல நடிகரின் மகன் என்பதாலும், ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களின் பிள்ளைகள் உடனிருந்த காரணத்தாலும் போலீசார் கவனிக்காமல் விட்டுவிட்டதாக விமர்சனங்கள் தொடர்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
