ஆஷஸ் தொடர் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியில் முதல் முறையாக இரண்டு பூர்வக்குடி வீரர்கள்!

 
ஆஸ்திரேலியா
 

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பூர்வக்குடி வீரர்கள் இடம்பெற்றிருப்பது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெர்த்தில் நாளை தொடங்கும் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் ஸ்காட் போலண்டுடன், வேகப்பந்துவீச்சாளர் பிரண்டன் டாக்கெட்டுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புதிய அணியில் டாக்கெட்டின் சேர்க்கை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியில் இதுவரை இடம்பெற்ற ஐந்தாவது பூர்வக்குடி வீரராக அவர் பெயர்பெற்றுள்ளார். முன்பாக ஃபெய்த் தாமஸ், ஜேசன் கில்லெஸ்பி, ஆஷ் கார்னெர் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் மட்டுமே பூர்வக்குடி வீரர்களாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

நியூ சௌத் வேல்ஸின் வோரிமி இனத்தைச் சேர்ந்த டாக்கெட், முதல்தர கிரிக்கெட்டில் 190 விக்கெட்டுகளை வீழ்த்திய திறமையாளராக உள்ளார். “கடந்த சில ஆண்டுகளாக அவரின் முன்னேற்றம் கணிசமாக உள்ளது; அவரது ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்த ஆஸ்திரேலியாவின் இந்த வரலாற்று தருணம் ஆஷஸ் தொடருக்கு கூடுதல் பெருமையைச் சேர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!