ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர்! வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை!

 
சுரேகா யாதவ்

தொலைதூர பயணங்கள் மக்கள் பெரும்பாலும் ரயில்களையே தேர்வு செய்கின்றனர். குறைவான கட்டணம், எளிதாக முன்பதிவு, சொகுசு பயணம் என காரணங்கள் கூறப்பட்டாலும் நடுத்தர மக்களின் பயண நண்பனாக இருப்பது ரயில்கள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்களை இயக்க  மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி படிப்படியாக வந்தே பாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதில் சுரேகா யாதவ் என்ற பெண், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல்  வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சுரேகா , வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெறுகிறார். இது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சுரேகாவின் புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வந்தே பாரத் – நாரி சக்தியால் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் ஸ்ரீமதி சுரேகா யாதவ் என பதிவிட்டுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில்  சதாராவில் வசித்து வரும்  திருமதி சுரேகா யாதவ், 1988ல்  இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர்  என்ற பெருமையை பெற்றார். சுரேகா அவரது சாதனைகளுக்காக  மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web