இளம்பெண்ணிடம் அத்துமீறல்... தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் கைது!

 
இயக்குநர் குஞ்சு

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK) தேர்வுக் குழுவின் தலைவரும், தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநருமான பி.டி. குஞ்சு முகமது, பெண் கலைஞர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான (IFFK) படங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த பி.டி. குஞ்சு முகமது பங்கேற்றார். இந்தப் பணிகளின் போது, அங்கிருந்த தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் கலைஞரின் அறைக்குள் குஞ்சு முகமது அத்துமீறி நுழைந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாலியல்

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல் மற்றும் அத்துமீறல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று இயக்குநரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரது கைதை உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்ட குஞ்சு முகமதுவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பிணையில் வரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், விசாரணைக்குப் பிறகு அவர் அன்றைய தினமே காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

கேரளத் திரைத்துறையில் சமீபகாலமாக 'ஹேமா கமிட்டி' அறிக்கை வெளியான பிறகு, பல முக்கியப் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில், ஒரு மூத்த இயக்குநரும் தேர்வுக் குழுத் தலைவருமான ஒருவர் மீது இத்தகைய புகார் எழுந்து கைது செய்யப்பட்டிருப்பது மலையாளத் திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!