தமிழக சட்டப்பேரவை கூட்டம் 17-ம் தேதி தொடக்கம்…!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34,327 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சட்டப்பேரவை விதி எண் 26/1ன் கீழ் சட்டப்பேரவை கூட்டம் வரும் 17-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்றார். அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 20-ம் தேதி பேரவை விதி 193/1ன் கீழ் முன்பண மானிய கோரிக்கையும், விதி 189/1ன் கீழ் 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படும்.

மேலும், 17-ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், அமைச்சர்களின் பதிலுரைகள், மானிய கோரிக்கைகள் மற்றும் சிறப்பு தீர்மானங்கள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
