நாசா அதிர்ச்சி தகவல்... பூமியில் மோதி நகரத்தைக் கொல்லும் சிறுகோள்!

 
சிறுகோள்

  
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறு கோளான 'ஆஸ்டிராய்டு 2024 YR4'  பூமியை நோக்கி மணிக்கு 38000கிமீ வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோள் விண்வெளியில் இருந்து நெருங்கி வருவதாகவும், இது சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.   இதனால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள் . இந்த கோள்  டிசம்பர் 2032ல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் மோதக்கூடும் எனவும்  அப்போது அதன் வேகம் மணிக்கு 38,000 கி.மீ. ஆக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

சிறுகோள்

இது பூமியுடன் மோதினால், பல நகரங்கள் அழியக்கூடும் எனக்  கூறப்படுகிறது. இந்த மோதலைத் தவிர்க்க சீனா ஏற்கனவே திட்டமிட தொடங்கிவிட்டது. அந்த வகையில், விண்வெளி பொறியாளர்கள் சிறுகோளைத் திசை திருப்ப முயற்சிப்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு முன்பு 1.3 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது அது 2.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.  இது தற்போது பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இது நெருங்க நெருங்க ஆபத்தும் அதிகம். இந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால், ஒரு பெரிய வெடிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சுமார் 8 மில்லியன் டன் TNT ஆற்றலை உருவாக்கும். இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 500 மடங்கு அதிக அழிவுகரமானதாக இருக்கும்.

சிறுகோள்

சுற்றளவில் 50 கிலோ மீட்டர் பரப்பளவு சாம்பலாகிவிடும் என சொல்லப்படுகிறது. நாசாவின் 'கேடலினா ஸ்கை சர்வே' திட்டத்தின் பொறியாளரான டேவிட் ராங் ” இந்த சிறுகோள் வடக்கு தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், தெற்காசியா, அரேபிய கடல் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையில் எங்கு வேண்டுமானாலும் மோதக்கூடும். அதாவது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான், நைஜீரியா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் நாடுகள்  இதில் அடங்கும். இதன் விளைவாக, இது இந்தியாவின் எந்த நகரத்தையும் தாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.  முன்னதாக, 'அபோஃபிஸ்' என்ற மற்றொரு சிறுகோள் 2029ஆம் ஆண்டில் பூமியுடன் மோதும் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர், அதன் பாதை மாறியதால், மோதலுக்கான சாத்தியக்கூறு இல்லை என அறிவிக்கப்பட்டது. நாசா உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.


சீனாவும் அத்தகைய சிறுகோளின் பாதையை மாற்ற முயற்சிக்கிறது. அவர்கள் 'சிறுகோள் எச்சரிக்கை வலையமைப்பை' உருவாக்கியுள்ளனர். இது அத்தகைய அண்டப் பொருட்களை அனைத்து நேரங்களிலும் கண்காணித்து, முழு உலகத்துடனும் தரவைப் பகிர்ந்து கொள்கிறது. இதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web