செம!! இன்று இரவு வானத்தில வெறும் கண்ணாலேயே பாக்கலாம்!! ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி..!!

 
வியாழன் வெள்ளி

சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வானவியல் நிகழ்வுகளில் அவ்வபோது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது.

அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் தேதிகளில் வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது.

நெப்டியூன்

அதனைதொடர்ந்து இன்று (புதன்கிழமை) வானில் வெப்பமான கோளான வெள்ளியும், ராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் இருக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது இரண்டு கோள்களுக்கு இடையே மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இதனையே 0.5 டிகிரி அளவு இடைவெளி என கூறுகின்றனர். 

நெப்டியூன்

இரண்டு கிரகங்களும் ஏற்கனவே இரவு வானத்தில் மிகவும் பிரகாசமாக உள்ளன, இரண்டும் சந்திக்கும் அரிய நிகழ்வை உலகம் முழுவதும் வானில் மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web