பொதுசேவை மையத்தில் துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டி ரூ3.5.லட்சம் கொள்ளை... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
பொதுசேவை மையத்தில் துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டி ரூ3.5.லட்சம் கொள்ளை...  பகீர் சிசிடிவி காட்சிகள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில்  ஜனசேவா கேந்திரா பொது சேவை மையத்தில் ஊழியர்கள் மார்ச் 11ம் தேதி வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மூன்று மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஏதோ விவரம் கேட்பது போல பேச ஆரம்பித்து திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி 3.5 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பொது சேவை மைய பணியாளர் பணத்தை பறித்ததும் மர்ம நபர்களை துரத்திக் கொண்டு ஓடினார்.இது குறித்த  காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துப்பாக்கி

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web