பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதல்: சீனாவில் 11 பேர் பலி!!
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட ரயில் விபத்தில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகர் குன்மிங்கில் உள்ள லூயாங்ஜென் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென வந்த சோதனை ரயில் ஒன்று மோதியதில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் 2 பேர் காயமடைந்தனர் என்றும் சீன ரயில்வே குன்மிங் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்த தகவலுக்குப் பிறகு ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் என்ன, மனிதத் தவறா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
