சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 12 பேர் உடல் கருகி பலி!

 
சீனா தீ

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டங் மாகாணத்தில் இருக்கும் சாந்தவ் நகரின் சாவோனன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவெனப் பரவியதில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனா தீ

சுமார் 150 சதுர மீட்டர் பரப்பளவுக்குத் தீ பரவிய இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 40 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சீனா தீ

இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாகச் சீன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட ஒரு பயங்கரத் தீ விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!