கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி!

 
லாரி

லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காகப் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்திற்கு லாரி ஒன்றில் பயணம் செய்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை சர்கோதா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் மீது இன்று அதிகாலை லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி அங்கிருந்த ஆழமான கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது.

கால்வாய்க்குள் லாரி

இந்த விபத்தில் லாரியில் இருந்த 23 பேரில் 6 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை வேளையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாகச் சாலை சரியாகத் தெரியாததால் ஓட்டுநரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!