நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு; 14 பேர் மாயம்!

 
படகு கவிழ்ந்து நைஜீரியா

நைஜீரியாவின் யொபி மாகாணத்தில் உள்ள ஆற்றில், அளவுக்கு அதிகமான பாரத்துடன் சென்ற படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

யொபி மாகாணத்தில் உள்ள கர்பி நகரில் நடைபெறும் சந்தைக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஒரு படகு புறப்பட்டது. அந்தப் படகில் மொத்தம் 52 பேர் பயணம் செய்துள்ளனர். இரவு நேரத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்து கப்பல்

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை ஆற்றில் இருந்து 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்து

இன்னும் 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி ஆற்றில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நைஜீரியாவில் சாலைக் கட்டமைப்பு சரியாக இல்லாததால் மக்கள் படகுப் போக்குவரத்தையே அதிகம் நாடுகின்றனர். ஆனால், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், படகின் கொள்ளளவை விட அதிகமான ஆட்களை ஏற்றுவதாலும் இது போன்ற விபத்துகள் அங்குத் தொடர்கதையாகி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!