கோவா தீ விபத்தில் 25 பேர் பலி… விடுதி உரிமையாளர்களுக்கு இன்டர்போல் வலை!
கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பின் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு விசாரணையை தொடங்கியது.

தீ விபத்து விவகாரத்தில் அலட்சியம் காட்டியதாக 3 அரசு அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே, கேளிக்கை விடுதி உரிமையாளர்களான சவுரவ் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து இருவருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை கண்டறிய சிபிஐ, இன்டர்போல் தலைமையகத்தை அணுகி நீல நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த விடுதியுடன் சேர்த்து, வகேட்டர் பகுதியில் உள்ள ‘ரோமியோ லேன்’ கேளிக்கை விடுதியும் இடித்து அகற்றப்பட்டது. முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
