விஷவாயு தாக்கி 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு... நைஜீரியாவில் துயரம்... மீட்பு பணிகள் தீவிரம்!
நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணம் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான சுரங்கம் ஒன்றில் ‘கார்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென விஷவாயு பரவியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த துயர சம்பவத்தில் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷவாயு தாக்கம் காரணமாக பலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன.

நைஜீரியாவில் பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
