20 வயசில் தமிழ்பட இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. தமன்னா சொன்ன அதிர்ச்சி தகவல்!
திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் சந்தித்த ஒரு கசப்பான மிரட்டல் சம்பவம் குறித்து முதன்முறையாகப் பகிர்ந்துள்ளது கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா உலகில் நடிகைகள் சந்திக்கும் அத்துமீறல்கள் குறித்துப் பலரும் 'மீ டூ' (Me Too) இயக்கத்தின் போது பேசிய நிலையில், தற்போது நடிகை தமன்னா தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான அனுபவத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தமன்னாவுக்கு 20 வயது இருக்கும்போது, ஒரு படத்தின் படப்பிடிப்பில் மிகவும் நெருக்கமான காட்சியில் நடிக்க அந்தப் படத்தின் இயக்குனர் அவரை வற்புறுத்தியுள்ளார். அந்தக் காட்சியில் நடிக்கத் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அது அசௌகரியமாக இருக்கிறது என்றும் தமன்னா இயக்குனரிடம் நேரடியாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த இயக்குனர், அங்கிருந்த ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு குழுவினர் முன்னிலையிலும், "இந்தக் கதாநாயகியை மாற்றிவிட்டு வேறு ஒருவரைப் போடுங்கள்" என்று சத்தம் போட்டுள்ளார்.

இயக்குனர் அழுத்தம் கொடுத்தும், வேலையை விட்டு நீக்குவேன் என்று மிரட்டியும் தமன்னா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். "என்ன நடந்தாலும் சரி, தப்பான ஒரு விஷயத்திற்குச் சம்மதிக்க மாட்டேன்" என்ற தைரியத்துடன் நின்ற தமன்னாவின் உறுதியைக் கண்டு, இறுதியில் அந்த இயக்குனர் தனது தவறை உணர்ந்து தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
