வருஷ கடைசியில் பெரும் துயரம்... லாரி - பேருந்து தீ விபத்து... 20க்கும் அதிகமானோர் பலி; பலர் படுகாயம்!
கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று அதிகாலையில் கர்நாடக மாநிலம் ஹிரியூர் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 20 பயணிகள் உயிருடன் எரிந்து சாம்பலானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவிலிருந்து சுற்றுலாத் தலமான கோகர்ணா நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை சுமார் 3 மணியளவில், சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே உள்ள ஹெப்புலி நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
Horrible accident Near Hiriyur along Bengaluru Hubballi highway, sleeper bus caught fire, 30+ feared dead! .#Busfire #chitradurga #karnataka pic.twitter.com/Fdpe5Tg999
— Naik Kartik (@mekartiknaik) December 24, 2025
லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த சமயம் அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மளமளவெனப் பரவியபோது அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. முதற்கட்ட தகவல்களின்படி, பேருந்துக்குள் இருந்த 17 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. விபத்தின் போது பேருந்தில் மொத்தம் 32 பயணிகள் இருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து காரணமாக ஹெப்புலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் கிரேன் உதவியுடன் எரிந்த பேருந்தின் பாகங்களை அகற்றி வருகின்றனர். பண்டிகை காலத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
