அடேங்கப்பா... ரூ.3023 கோடிக்கு ஆர்டர்.. அள்ளியது KEC இன்டர்நேஷனல்!

 
கேஇசி

சிவில் - இந்தியாவின் நீர் குழாய் மற்றும் வணிக கட்டிடப் பிரிவுகளில் உள்கட்டமைப்பு பணிகளைச் செய்வதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. பரிமாற்றம் மற்றும் விநியோகம் (T&D) - வணிகமானது அமெரிக்காவில் டி&டி திட்டங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. கேபிள்கள் - இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு வகையான கேபிள்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

கேஇசி

நேற்று, KEC இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூ.459.25-ல் இருந்து 9.53 சதவீதம் உயர்ந்து ரூ.503 ஆக உயர்ந்தது. பிற்பகல் 03:30 மணியளவில், நிறுவனத்தின் பங்குகள் 2.23 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை ரூ.485.80 ஆக நிறைவடைந்தது. இன்று அதன்விலையானது தற்பொழுதைய நிலவரப்படி சற்றே குறைந்து 478.15க்கு வர்த்தகமாகிறது.

KEC இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது மின் பரிமாற்றக் கோடுகளின் ஆயத்த தயாரிப்பு திட்டங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனமாகும். இது 1979ல் நிறுவப்பட்ட RPG குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும்.

கேஇசி

நிதிநிலைகளைப் பற்றி பேசுகையில், நிறுவனம் அதன் காலாண்டு மற்றும் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் நேர்மறையான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. Q2FY23ல், நிறுவனம் நிகர விற்பனை 4,064 கோடி மற்றும் நிகர லாபம் 55 கோடி அதேசமயம், FY22ல், மொத்த நிகர விற்பனை முறையே 13,742 கோடி மற்றும் மொத்த நிகர லாபம் 332 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது வாங்கத்தகுந்த பங்கு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று, நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 2.65 மடங்குக்கு மேல் அதிகரித்தன. வரவிருக்கும் வர்த்தக அமர்வுகளுக்கு முதலீட்டாளர்கள் இந்த மிட்-கேப் நிறுவனத்தின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web