சில்லறை பிரச்சனைக்கு தீர்வு… புதிய ஏடிஎம் திட்டம்!

 
துக்கம்

பொதுமக்களுக்கு நீண்ட காலமாக உள்ள சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க ஒன்றிய அரசு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை நேரடியாக பெறும் வகையில் புதிய ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏடிஎம் திட்டம் தற்போது மும்பையில் அதிகளவில் சில்லறை பரிவர்த்தனை நடைபெறும் சில பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி தேவைகளுக்கு மக்கள் எளிதாக சில்லறை பணம் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை திட்டத்தின் பயன், சிக்கல்கள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பொதுமக்களின் சில்லறை பணப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!