பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தில் ரூ.7.11 கோடி கொள்ளை !
பெங்களூரு ஜேபி நகரைச் சேர்ந்த தனியார் வங்கியின் ஏடிஎம் மையங்களுக்கு ரூ.7.11 கோடி பணம் எடுத்துச் சென்ற பாதுகாப்பு நிறுவன வாகனம் கடந்த 19-ம் தேதி ஜெயநகர் அசோக் பில்லர் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்டது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அதிகாரிகள் எனத் தெரியப்படுத்திக் கொண்ட அந்த கும்பல், சோதனை என்ற பெயரில் வாகனத்தை நிறுத்தி, துப்பாக்கி முனையில் பணத்தை பறித்து சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த தைரியமான கொள்ளை சம்பவம் நகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் இன்று முக்கிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர், பணப்பரிவர்த்தனை வாகன பொறுப்பாளர் கோபால் பிரசாத் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.5.70 கோடி பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளையில் மேலும் சிலர் தொடர்புடையதாக போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். அவர்களைத் தடயவெனத் தேடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 30 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
