அட்ரா சக்க!! தொடர் சரிவில் தங்கம்!! குஷியில் இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,250க்கும், சவரனுக்கு ரூ240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.20க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 குறைந்து ரூ.71,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ45000க்கும் அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  தற்போது அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில்  கடந்த  ஒரு வார காலமாக  தினசரி சற்று தங்கத்தின் விலை குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

nayanthara gold jewels

ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி, கொரோனா ஊரடங்கு , இயற்கை பேரிடர், மத்திய அரசின் இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. இனி குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். ஏறும் போது இரட்டை இலக்கத்திலும், சரியும் போது ஒற்றை இலக்கத்திலும் இருப்பதாக  முதலீட்டாளர்கள் குறைபட்டு கொள்கின்றனர். அதற்கு ஏற்றாற் போல் மொத்தமாக ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் மெல்ல மெல்ல சரிய தொடங்கியிருப்பது நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web