பகீர் வீடியோ... மொபைல் வேணும்... ரயில்வே மின்கம்பத்தில் ஏறி அட்டூழியம் ... உயர் அழுத்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞர் !
மும்பை நகரின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான கல்யாண் ரயில் நிலையம் நேற்று மதியம் ஒரு மர்ம நபரின் விபரீதச் செயலால் போர்க்களம் போல் காட்சியளித்தது. மதியம் சுமார் 1:30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ரயில்வே உயர் அழுத்த மின்சாரக் கம்பம் (OHE Pole) மீது விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்த பயணிகள் அலறியடிக்க, உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF) போலீஸாரும் அங்கு குவிந்தனர். கீழே இறங்குமாறு அவர்கள் விடுத்த எச்சரிக்கையை அந்த நபர் சற்றும் காதில் வாங்காமல் கம்பத்தின் உச்சியில் நின்றபடி ரகளை செய்தார்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தனக்கு ஒரு செல்போன் வேண்டும் என அந்த நபர் வினோதக் கோரிக்கை வைத்தார். பாதுகாப்பு கருதி போலீஸார் ஒரு போனை வழங்கியபோதும், சில நிமிடங்களிலேயே அதைத் தூக்கி எறிந்துவிட்டு, குரங்கு போல ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்குத் தாவத் தொடங்கினார். இதனால் விபரீதத்தை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாக 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் மின் விநியோகத்தைத் துண்டித்தனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, எதிர்பாராத விதமாக அந்த நபர் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பியைத் தொட்டதால், உடல் கருகி மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட போலீஸார், உடனடியாக மும்பை சயான் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடிச் சம்பவத்தால் கல்யாண் ரயில் நிலையத்தின் 5 நடைமேடைகளிலும் சுமார் இரண்டு மணி நேரம் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பணிநேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் ஆயிரக்கணக்கான அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நபர் யார், எதற்காக இப்படிச் செய்தார் என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
