அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்... ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் போர் பதற்றம்!
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், வாகனங்கள் தீவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறை பயன்படுத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில், போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படும் என்றும், அமெரிக்க ராணுவ தளங்கள் இலக்காக மாறும் என்றும் ஈரான் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நடந்துள்ள நிலையில், தற்போதைய நிலைமை புதிய போர்பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
