பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல்... பரபரப்பு!
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அகதிகள் வெளியேற்றம், கொள்கை மோதல், தொடர்ந்த தாக்குதல்கள் ஆகியவை காரணமாக இருநாடுகளிடையேயான அமைதி முயற்சிகள் ஏற்கனவே தடுமாறிய நிலையில், பெஷாவரில் உள்ள ராணுவ தலைமையகத்தை குறிவைத்து உயிர் தியாக படை பயங்கரவாதிகள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு நுழைந்த மூன்று தீவிரவாதிகள், ராணுவத்தளத்துக்குள் புகுந்து வெடிகுண்டு வெடித்ததால் மூன்று ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று தீவிரவாதிகளும் சிதறி உயிரிழந்தனர்.

இந்த திடீர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெரிக்–இ–தலீபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அண்மையில் இஸ்லாமாபாத் நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பிலும் 15 பேர் பலியானதை தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கையாக இருந்தபோதும், புதிய தாக்குதல் நடைபெறக் காரணமானது எல்லைச்சூழலின் மோசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களில் இருநாடுகளிடையே மனக்கசப்பு அதிகரித்து அமைதி ஒப்பந்தம் செயலிழந்தது நிலைமை மேலும் பதட்டமடைந்ததற்குக் காரணமாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “வெளிநாட்டு ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்; பாதுகாப்புப் படையினர் தன்னலமற்ற செயலால் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
