வீட்டிற்குள் நுழைந்து சராமாரி தாக்குதல் ... பெண் உட்பட 2 பேர் வெட்டிக்கொலை!

 
 வீட்டிற்குள் நுழைந்து சராமாரி தாக்குதல் ... பெண் உட்பட 2 பேர் வெட்டிக்கொலை!


 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசித்து வருபவர்  ஆனந்த் . இவரது மகன் 20 வயது பிரகதீஷ். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் தெரிந்ததும்  சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.  

வெட்டி
இந்நிலையில் புது கிராமம் செண்பக நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் பாஸ்கரன் மனைவி கஸ்தூரி (48) மற்றும் அவரது சகோதரர் சண்முகசுந்தரம் மகன் செண்பகராஜ் (44) ஆகிய இருவரையும் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டது .  இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் தெரிந்ததும் விரைந்து  போலீசார்  சடலத்தை கைப்பற்றி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த செண்பகராஜை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை
இந்த இரு கொலை சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பழிக்குப் பழி கொலையாக இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் இரட்டை கொலை நடந்ததையடுத்து வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் பிரகதீஷ் சடலத்தையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது