மக்களை பூட்ஸ் காலால் உதை, தாக்குதல்.!! உதவி ஆய்வாளர் அடாவடி!!

 
ஆரோக்கியதாஸ்

நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் ரவுண்டானாவில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் அரசு பேருந்து மற்றும் இதர கனரக வாகனங்கள் அப்பகுதியில் மெதுவாக செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனை அறிந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார், சாராய கடத்தல்களை தடுக்க சோதனை செய்வது அவசியம் என கூறினர். எனினும் வாக்குவாதம் நடைபெற்றது.

ஆரோக்கியதாஸ்

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை தாக்கி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல், போராட்டம் நடத்திய ஆரோக்கியதாஸ் என்ற நபரை காவல் வாகனத்தில் ஏற்றினார். அப்போது அவர் தனது பூட்ஸ் காலால் உதைத்துள்ளார்.

ஆரோக்கியதாஸ்

இந்த காட்சிகளை அங்கிருந்து பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இதனிடையே இதை அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், பூட்ஸ் காலால் உதைத்த நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!