ஈரோட்டில் பரபரப்பு.. அதிமுக நிர்வாகி கைது! இளம்பெண்ணைத் தாக்கி.. கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு!

 
கீதா

பெண்ணை வீதியில் இழுத்துதாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். 

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு மாவட்டத்தின் புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளராக இருப்பவர் ஜி.கே.மூர்த்தி (49). திருமணமான இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். 

கீதா

இந்நிலையில், ஜி.கே.மூர்த்தி மீது புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா (39) என்ற போலீசில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மூர்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். எனது நடத்தை மீது சந்தேகப்பட்டு அவர் என்னை கடுமையாக தாக்கியதில் முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் என தலை முடியை பிடித்து தெருவில் இழுத்து சென்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். 

கீதா

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மூர்த்தியை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்ணை தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்