மக்களே உஷார்.. மீண்டும் ஒரு லாக்டவுன் வேண்டாம்.. இந்தியாவில் 7000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு !!

 
கொரோனா

இந்தியாவில் முழுமையாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7, 830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,215 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,692 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா

மாநில அளவில், அதிகப்படியாகக் கேரளாவில் 761 பேர் தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,506 ஆக உள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,876 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, ஹிரியானா, உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து உயர்வை எட்டிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தை பொருத்தவரை புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உள்ளது. 198 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web