வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு... ஜூன் 1 முதல் வங்கி விதிகளில் புதிய நடைமுறை!

 
வங்கி
ஜூன் 1 ம் தேதி முதல் வங்கி விதிகளில் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அதன்படி  சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப்பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல், ரூ.5 லட்சம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். மேலும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் ரூ.100 ஆக இருக்கும்.

வங்கி
 
கிளப், டிலைட், அனைத்து NRI மற்றும் குடியுரிமை சேமிப்புத் திட்டக் கணக்கு வைத்திருப்பவர்களும் ரூ.5,000 AMB பராமரிக்க வேண்டும். பொது வாடிக்கையாளர்களுக்கு 20% வரை பற்றாக்குறைக்கு ரூ.75 மற்றும் 100% பற்றாக்குறைக்கு அதிகபட்சம் ரூ.375 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரூ.60 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். கிராமப்புற கிளைகளில், அனைத்து கணக்குகளுக்கும் கட்டணம் சற்று குறைவாக இருக்கும்.  
இலவச வரம்பைத் தாண்டிய பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பரிவர்த்தனைகளுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.12  வசூலிக்கப்படும். குறைந்த இருப்பு காரணமாக நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். ஃபெடரல் வங்கி ஏடிஎம்களில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
அதே போல்  வங்கிகளில் லாக்கர் வாடகை
கிராமப்புற மற்றும் சிறு நகரக் கிளைகள்
சிறிய லாக்கர்: ஆண்டு வாடகை ரூ.2,000
நடுத்தரம்: ரூ.3,300 வாடகை
பெரியது: ரூ.5,500 வாடகை

வங்கி
நகர்ப்புற மற்றும் பெருநகரக் கிளைகள்
சிறிய லாக்கர்: ரூ.2,950 முதல் ரூ.5,000 வாடகை
நடுத்தரம்: ரூ.3,950 முதல் ரூ.6,800
பெரியது: ரூ.7,400 முதல் ரூ.12,800 வாடகை
 அதே போல் 6 மாதங்களுக்குள் கணக்கு முடிக்கப்பட்டால் ரூ100.  கிராமப்புற அல்லது மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு ரூ.100, பிற கணக்குகளுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். முதல் வைப்புத் தொகையிலிருந்து 14 நாட்களுக்குள் கணக்கு மூடப்பட்டால் கட்டணம் எதுவும் கிடையாது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது