பயணிகள் கவனத்திற்கு... நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம் - நேரடி ரயில் சேவை ரத்து!

 
மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நாளை (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14) அதிகாலை நேரத்தில் ரயில் சேவைகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஒன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாரத்தான் போட்டி அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

மெட்ரோ ரயில்

மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக, நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது அதிகாலை நேரத்தில் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும்.

இருப்பினும், இந்தச் சிறப்புச் சேவை நேரத்தில் ஒரு முக்கியமான வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை, எம்.ஜி.ஆர் சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரடி ரயில் சேவை (கோயம்பேடு வழியாக) இயக்கப்படாது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ

எனவே, இந்த நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள், எம்.ஜி.ஆர் சென்டிரல் நிலையத்தில் இருந்து (கிண்டி வழியாகச் செல்லும் ரயில்களைப் பிடித்து), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, தாங்கள் செல்ல வேண்டிய வழித்தடத்தை மாற்றிக்கொண்டு பயணத்தைத் தொடரலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!