உலகில் முதன் முறையாக 16 வயதுக்கு கீழ் சோஷியல் மீடியாவுக்கு ‘ரெட் கார்டு’... ஆஸ்திரேலியா அதிரடி!
உலகின் முதல் நாடாக, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களை முழுமையாகத் தடை செய்து ஆஸ்திரேலியா இன்று சட்டம் அமல்படுத்தியுள்ளது. சிறார்களின் மனநலத்தைப் பாதுகாக்கவே இந்த முடிவு என அரசு தெரிவித்துள்ளது. சைபர் புருலிங், போலி செய்திகள், போதைப்பொருள், பாலியல் துன்புறுத்தல் போன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளை காப்பதே இலக்கு.
டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட் உள்ளிட்ட முக்கிய தளங்களுக்கு இந்த தடை பொருந்தும். பெற்றோர் அனுமதி இருந்தாலும் 16 வயதுக்குக் கீழ் கணக்கு வைத்திருக்க முடியாது. விதிகளை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். சிறார்கள் அல்லது பெற்றோர்கள் மீது எந்த தண்டனையும் இல்லை.

யூடியூப் கிட்ஸ், வாட்ஸ்அப் போன்ற சில ஆப்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறுகின்றன. உலகின் பிற நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை பரிசீலித்து வருகின்றன. சிறார்களின் கல்வி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இது உதவும் என அரசு நம்புகிறது. ஆனால், சமூக தொடர்பு குறையும் என சிலர் விமர்சிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
