நாளை இந்தியாவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்... வீரர்கள் பட்டியல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்தன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ICC has approved Cooper Connolly's inclusion in the Australian squad after Matt Short was ruled out #ChampionsTrophy
— cricket.com.au (@cricketcomau) March 2, 2025
More: https://t.co/IAGZXiAJCd pic.twitter.com/kaNvWAvkiN
துபாயில் நாளை மார்ச் 4ம் தேதி நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், நாளை மறுநாள் (மார்ச் 5) லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் விளையாட உள்ளன.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நாளை விளையாட இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக கூப்பர் கன்னோலி அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயம் காரணமாக மேத்யூ ஷார்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதாகும் கூப்பர் கன்னோலி அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, கூப்பர் கன்னோலி ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற கூப்பர் கன்னோலி, தற்போது மேத்யூ ஷார்ட்டுக்குப் பதில் அணியில் இடம்பெற ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான கூப்பர் கன்னோலியை ஆஸ்திரேலிய அணி களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஸாம்பா.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!