ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்... விளிம்பில் வரலாற்றுச் சாதனை!

 
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பூங்காவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், 38 வயதான செர்பிய ஜாம்பவான் ஜோகோவிச் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இத்தாலியின் இளம் தகுதிச் சுற்று வீரர் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி. 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெற்றார். சுமார் 2 மணிநேரம் 15 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில், ஜோகோவிச் தனது அனுபவ ஆட்டத்தால் மேஸ்ட்ரெல்லியை வீழ்த்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்: டென்னிஸ் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஜோகோவிச்

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஜோகோவிச் தனது 399-வது வெற்றியைப் பெற்றுள்ளார். அடுத்த 3-வது சுற்றில் நெதர்லாந்தின் வான் டி சாண்ட்சுல் (Botic van de Zandschulp) உடன் ஜோகோவிச் மோதவுள்ளார். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் 400 வெற்றிகளைக் குவிக்கும் உலகின் முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைப்பார். ஆஸ்திரேலிய ஓபன் அரங்கில் மட்டும் ஜோகோவிச் பெற்றுள்ள 101-வது வெற்றி இதுவாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!