புறநோயாளிகள் வரிசையில் ஆட்டிஸம் மற்றும் மரபணு குறைபாடு உள்ளோருக்கு முன்னுரிமை ... புதிய அரசாணை!

 
ஆட்டிசம் ஆட்டிசம்

தமிழகத்தில் ஆட்டிஸம், கவனச்சிதறல் மற்றும் பிறவி மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க மாநில அரசு முன்வந்துள்ளது. இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களைப் போல நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பது கடினம் என்பதால், அவர்களுக்குப் புறநோயாளிகள் பிரிவில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவுசார் குறைபாடுடையோருக்கான சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாணையின்படி, பெருமூளை வாதம் மற்றும் பல்லுறுப்பு முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் வழங்கப்படும் அதே வேகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் இந்த புதிய நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனச் சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், இனி இத்தகைய மாற்றுத்திறனாளிகள் எவ்விதத் தடையுமின்றி விரைவாகத் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற முடியும்.

மருத்துவக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளும், இந்த அரசாணை குறித்து அந்தந்தப் பகுதி மருத்துவமனைகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர் சங்கம் மூலமாகத் தனியார் மருத்துவர்களுக்கும் இந்தத் தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் ஒரே சீரான நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!