ஆட்டோ ஓட்டுனர் மனைவியை கத்தியால் குத்தி, தற்கொலை முயற்சி!

 
சென்னை
 

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் தமது மனைவி சத்யாவை கத்தியால் குத்தி காயமடையச் செய்தார். தேவகுமார் நீண்ட நாட்களாக மதுபான பழக்கத்தில் இருந்து வந்தார். நேற்று இரவு, வீட்டில் மது அருந்திய நிலையில், சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது தேவகுமார் தகராறு செய்து மனைவியை மிரட்டி வந்தார்.

மனைவி சத்யா அதை பொருட்படுத்தாமல் தனது வேலையை தொடர்ந்த நிலையில் தேவகுமார் கோபமடைந்து கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்யாவை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மனைவியை கத்தியால் குத்திய குற்ற உணர்வுடன் தேவகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி, தேவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!