கூட்டணிக்கு எதிராக பேசுவதை தவிர்த்திடுங்க... அமித்ஷா அட்வைஸ்!
இன்று ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை வேலம்மாள் திடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். அதற்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பாஜக-வின் வாக்கு வங்கியை விரிவாக்குவதற்கு தீவிரமான முயற்சிகள் தேவை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அமித்ஷா, அண்ணாமலையுடன் நடத்திய ஆலோசனையில், அதிமுக கூட்டணிக்கு எதிராக பகிரங்கமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே, “அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது மற்றும் இறுதியானது,” என்று முன்னர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அண்ணாமலையின் சில கருத்துகள் கூட்டணி தர்மத்தை மீறுவதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சனங்கள் எழுந்தது. இதனால், கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அமையும் என்பதால், இத்தகைய பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
