பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் கைது.. 6 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 20 பயங்கரவாதிகளும், தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

பாகிஸ்தான் வெடிகுண்டு

அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து, 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web