அசத்தல்!! சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த அஸ்வின் !!

 
அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆட்டங்களின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளரான இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களிடையே இந்த தகவல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 14ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற  4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அஸ்வின்

4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்  ஐசிசி டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.இந்த போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக தரவரிசைபட்டியலில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் .  தற்போது ஆண்டர்சனை விட கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிப் பறித்துள்ளார்.

விராட் கோஹ்லி

தற்போதைய நிலவரப்படி  அஸ்வின் 869 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்ளாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 841 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 8 இடங்கள் முன்னேறி 13வது இடத்தில் உள்ளார். நடந்து முடிந்த அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் விளாசித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web