அசத்தல்!! இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை!!

 
கருவாட்டு கடை

இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் ஒரு பொருள், ஒரு நிலையம் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டத்தின் படி  விமானம் மற்றும்  ரயில் நிலையங்களில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருட்களை விற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கருவாட்டு கடை

சென்னை, காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், நெல்லை, திருச்செந்தூரில் பனை பொருட்கள் என தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும்  ’ஒரு பொருள் ஒரு நிலையம்’  திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தற்போது மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கருவாடு விற்பனைக்கு தனிக்கடை என்பதில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கருவாடு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருவாட்டு கடை
ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் ஒன்றிணைந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் பாலித்தீன் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உலர் மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட் என்ற பெயருடன் தொடங்கப்பட்ட இந்த கடை விமான நிலையங்களில் அமைந்திருக்கும் அதிநவீன விற்பனை கூடங்கள் சாயலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் எளிதில் பொருட்களை வாங்கிச் செல்லும் வகையிலும்  100 ரூபாயில் இருந்து  கருவாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கருவாடுகள் பேக் செய்யப்பட்டு இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web