அசத்தல்... விமான நிலைய ரன்வே பகுதிகளில் பறவைகளை துரத்த 'தண்டா் பூம்ஸ் கருவி'!
சென்னையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவைகளில் குறிப்பிடத்தக்கது சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களுக்காக தினமும் இங்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பாடு வருகை என எந்நேரமும் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறது.

சென்னை விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மரங்கள், குடியிருப்புகள் இருப்பதால், விமான வழித்தடங்களில் அவ்வப்போது பறவைகள் பறந்து விபத்துகளை ஏற்படுத்தி வந்தன. இந்த அபாயத்தை குறைக்கும் வகையில் பறவைகளை துரத்துவதற்காக சென்னை விமான நிலைய நிா்வாகம், இதுவரை பணியாளா்கள் மூலம் பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் வந்தன. இதன் மூலம் 100 சதவீதம் பலன் கிடைக்கவில்லை. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தற்போது பறவைகளை ஒலி எழுப்பி துரத்தும் வகையில் புதிய கருவி ஒன்றை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது.

இந்த கருவி ஓடுபாதை பகுதிகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, 'தண்டா் பூம்ஸ்' என்ற பெயா்கொண்ட இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை வாங்கியுள்ளது. குழல் வடிவிலான இக்கருவி இடி இடிப்பது போன்ற ஓசையை எழுப்பும். தற்போது இக்கருவிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது நூறு சதவீதம் பலன் அளிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
