வியப்பூட்டும் வீடியோ... மாஸ்... பைக்கை தோளில் சுமந்து ரயில்வே கிராசிங்கை கடந்த நபர்!

ரயில்கள் சில இடங்களில் அவை செல்லும் வழியை கடந்து செல்வதற்காக ரயில்வே கிராசிங் அல்லது லெவல் கிராசிங் அமைக்கப்பட்டு இருக்கும். ரயில்கள் செல்லும்போது இந்த ரயில்வே கிராசிங் மூடப்படும். இதன் இருபுறமும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். ரயில் சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டு, வாகனங்கள் பயணிக்க தொடங்கும்.
A guy Lifted his bike on his shoulders to Cross the Railway barrier: pic.twitter.com/ki4dx5BmZZ
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 6, 2025
எனினும், ரயில்வே கிராசிங்கில் காத்திருக்க பிடிக்காமல் நடந்து வருபவர்களில் சிலர் குறுகலான வழியே கடந்து மறுபுறம் சென்று விடுவதுண்டு. வாகனங்களில் செல்பவர்கள் அப்படி செய்ய முடியாது. ஆனால், நம்மூரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பாகுபலிக்கே சவால் விடும் வகையில், அதனை தூக்கி தோள் மீது வைத்து ரயில்வே கிராசிங்கை கடந்து மறுபுறம் செல்கிறார். இதனை மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சில மணி நேரங்களில் 10 லட்சம் முறை பார்க்கப்பட்டு உள்ளது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். சூப்பர் ஹீரோ பாருடா... இவர் தான் நிஜமான ரியல் ஹீரோ டா... மேலும் இதேபோன்று, பைக்குகளின் தரம் குறைந்து விட்டது என்றும், ஜிம்முக்கு செல்ல அவருக்கு இன்று நேரம் இல்லை என்றும், பாகுபலி சட்ட மீறலில் ஈடுபடுகிறார் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!