ஆச்சர்யமூட்டும் வீடியோ... வேட்டையாடும் ஜாக்குவாரை நடுநடுங்க வைக்கும் காகம்... !

 
ஜாக்குவாரை நடுங்க வைக்கும் காகம்


 
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் அபூர்வ காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அமேசான் காட்டுப் பகுதிகளில் காணப்படும் கொடூரமான வேட்டையாடும் விலங்கு ஜாகுவார் . 
இந்த  ஜாகுவாரை ஒரு சாதாரண காகம் துணிச்சலுடன் மிரட்டும் காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.  ஒரு வீட்டின் வெளியில் செல்லப்பிராணியாக  ஜாகுவார் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே, ஒரு காகம் அதன் மீது தொடர்ந்து குரல் எழுப்பி, பலமுறை நெருங்கி வந்து மிரட்டல் விடுக்கிறது.  


இந்த செயல் வீடியோவை காண்பவர்களுக்கு பெரும்  ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஜாகுவார் காகத்தைத் தாக்காமல், அதிலிருந்து விலகிச் செல்வதற்குப் போராடியது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “காகத்தின் துணிச்சல் ஜாகுவாரின் ஆணவத்தைத் தகர்த்தது” எனக் கூறியுள்ளனர்.  @alexanderkremen என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, எளியவனின் தைரியம், பெரியவனை முறியடிக்கக்கூடிய சக்தி கொண்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது