ஆச்சர்யம்... வைரல் வீடியோ... ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ரோபோ !

 
போலீஸ் ரோபோ
 

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில்  ஹ்யூமனாய்டு ரோபோக்கள் போலீஸ் யூனிபார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றன.  இந்த ரோபோக்கள் பொதுமக்களிடம் கைகுலுக்கி நட்பாக உற்சாகமூட்டி வருகின்றன. அத்துடன் பேச்சு கட்டளைகளை செயல்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. தற்போது குறுகிய வேலைகளை இந்த ரோபோக்கள் செய்தாலும், எதிர்காலத்தில் காவல்துறையினரின் வேலை சுமையை குறைக்கும் புதிய முயற்சியாக இதை கருதலாம். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

இந்த ரோபோக்களை EngineAI Robotics என்ற Shenzhen நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பெயர் PM01 ஆகும். இந்த ரோபோ 1.38 மீட்டர் உயரம், 40 கிலோ எடை கொண்டது. மேலும் ஒரு ரோபோவின் விலை சுமார் ரூ10.5 லட்சம் ஆகும்.இதன் சிறப்பு அம்சம் அதன் இடுப்பு 320 டிகிரிக்கு சுழலக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.  இதனால் பல்வேறு நுண்ணிய இயக்கங்களை செய்ய முடியும். 

மேலும் ரோபோவில் அயன் மேன் திரைப்படத்திலிருந்து ஈர்க்கப்பட்ட சிறப்பு கட்டுப்பாடு இன்டெர்பேஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. சீன அரசாங்கம் நாட்டின் சுயதின வளர்ச்சியை அதிகரிக்கவும் பொருளாதார முன்னேற்றத்தை தூண்டவும் ரோபோக்களை முக்கிய பங்காக பார்க்கிறது. சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதால் வேலைவாய்ப்பில் ரோபோக்களின் பங்கு அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web