சிறையில் மோதல்… அயோத்தி குண்டுவெடிப்பு சதி குற்றவாளி குத்திக் கொலை!

 
அயோத்தி

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை மற்றும் ஹரியாணா சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அயோத்தியில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாகவும், பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் ஃபரிதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறைக்குள் ரஹ்மானுக்கும் அருண் செளதரி என்ற கைதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு கடுமையாக மாறிய போது, செளதரி கூர்மையான ஆயுதத்தால் ரஹ்மானை குத்தினார். பலத்த காயமடைந்த ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரஹ்மானை கொன்ற செளதரி ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் அவர் அங்குள்ள சிறையில் இருந்து ஃபரிதாபாத் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!